பயணம் !!!   8 comments

சமீபத்தில் எனது பிறந்த ஊருக்கு சென்றிருந்தேன், காலை 5:30 மணிக்கு திருச்சி பேருந்து நிலையத்தில் எனது சொந்த ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன், அப்பொழுது மின்னல் வேகத்தில் எனது அருகே வந்து நின்றது ஒரு பேருந்து. சரியான உறக்கம் இல்லாமல் கவலை தோய்ந்த கண்களுடன் அந்த பேருந்தை பார்த்தேன். அந்த பேருந்தின் பெயர் “காவேரி”. அது என் ஊருக்கு செல்லும் பேருந்து தான். சென்னை மற்றும் சில மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டத்திலும் தனியார் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

காவேரி என்ற பெயரை படித்த கணத்தில் இருந்து எனது மனதில் ஒரு புத்துணர்ச்சி கிளம்பியது, கவலை தோய்ந்த என் கண்கள் விரிந்தன பேருந்தை நோக்கி ஓடி, ஏறி அமர்ந்தேன். அதிகாலை என்பதால் பேருந்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது, சிலர் காய்கறி பழ மூட்டைகளை ஏற்றிகொண்டிருந்தனர். அன்றைய பொழுதிற்கான காய்கறிகளை சந்தையில் இருந்து தினமும் எங்கள் ஊருக்கு இந்த பேருந்தில் தான் எடுத்து வருவார்கள். ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து காலை பொழுதை ரசித்துக்கொண்டிருந்த பொழுது மனதுக்குள் ஏகப்பட்ட சுகமான நினைவுகள் என் தூக்க கலக்கத்தையும் மீறி என் சிந்தனையை கலைத்தன, அந்த எண்ண அலைகள் என்னை ஒரு 13 வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது.

நான் ஆறாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுருந்தேன், அது நாள் வரை பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான், முதல் முறையாக தனியார் பேருந்தில் அனுப்ப என் அப்பா முடிவு எடுத்திருந்தார்.

முதல் நாள் என்னை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச்சென்று, நிறைய அறிவுரைகளை கூறினார். ஆனால் எனக்கு எதுவுமே தலையில் ஏறவில்லை ஒரு பக்கம் தனியே செல்கிறோம் என்ற சந்தோஷம் இருந்தாலும் மறுபுறம் ஒரு வித பயமும், பீதியும் என்னை பற்றிக்கொண்டது. யாரோ என்னை ஆட்டிக்கொண்டது போல எனது மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஓடின, எனது முகம்  திருவிழாவில் கானாமல் போன ஒரு சிறுவன் நாம் தொலைந்துவிட்டோம் என்று அறிந்து அழுவதுர்க்கு முன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.  ஆனால் என் அப்பாவிற்கு எப்படி இருக்கும் என்று நான் நினைத்து பார்கவில்லை, இன்று விஞ்ஞான வளர்ச்சியில் நாம் சரியாக சென்றோமா என்ற விவரத்தை கைப்பேசி மூலம் அறிந்து கொள்ளலாம், அப்பொழுதோ அன்று மாலை நான் வீடு திரும்பினால் தான் அவர்களுக்கு நிம்மதி.

ஒரு வழியாக என்னை பேருந்தில் ஏற்றிவிட்டு அவர் சென்றுவிட்டார், அந்த பேருந்து காலை 8:45 எங்கள் ஊரில் இருந்து கிளம்புவதால் போக போக மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. எனது பின் இருக்கையில் இரு பெண்கள் தங்கள் குடும்ப கதையை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தனர், எனது அருகே இருந்தவர் நன்கு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார், பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்கள் பைகளை எனது மடியில் கொட்டினர், அப்பாவி பையனை போல் நான் எதுவுமே பேசவில்லை. ஜன்னல் வழியே ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த அறை மணி நேர பயணம் எனக்கு எதோ வெகு தூரம் செல்வதை போன்றே இருந்த்தது. ஒரு வழியாக 9:30 மணிக்கு நான் பள்ளி பொய் சேர்ந்தேன்.

இவ்வாறு சில நாட்கள் நான் என் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது எனது ஊரில் இருந்து எனது பள்ளிக்கு செல்லும் மற்றும்மொரு மாணவர் கூட்டம் தினமும் இந்த காவேரி பேருந்தில் தான் செல்லுவார்கள். அவர்கள் என்னை நிறைய முறை கூப்பிட்டும் நான் செல்லவில்லை காரணம் அவ்வளவு சீக்கிரம் பள்ளிக்கு சென்று என்ன செய்வது என்று மனதுக்குள் தோன்றும். ஒரு நாள் சரி போய்தான் பார்ப்போம் என்று ஏறினேன். அதற்கு பிறகு நான் என் பள்ளி படிப்பு முடியும் வரை அந்த பேருந்தில் தான் தினமும் சென்றேன். அந்த பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் முதல் அனைவரும் பயிற்சியம் ஆனார்கள், அதன் பின் ஒரு நாள் அந்த பேருந்தை விட்டால் மனதுக்குள் ஒரு உறுத்தலாகவே இருக்கும்.

அந்த 30 நிமிட பயணத்தில் நங்கள் அடிக்காத கிண்டல், கேலிகள் இருக்க முடியாது, கூட பயணம் செய்பவர்கள் முதல் ரோட்டில் செல்பவர்கள் வரை ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. அந்த சுகமான நினைவுகளை அசை போட்டு கொண்டிருக்கையில் ஒரு குரல் “சார் டிக்கெட்”. திரும்பி பார்த்தால் நான் பள்ளிக்கு சென்ற பொழுது டிக்கெட் கொடுத்த அதே நடத்துனர், நான் சிரித்துக்கொண்டே 10 ரூபாய் நோட்டை நீட்டினேன். உடனே “என்ன பா சில்லறை இல்லையா?, காலங்காத்தாலே சில்லறைக்கு நான் எங்க போறது” என்று புலம்பிக்கொண்டே டிக்கெட் கொடுத்தார். அவருக்கு என்னை சுத்தமாக ஞாபகம் இல்லை, அவரும் தான் எத்தனை ஆயிரம் பயணிகளை சந்தித்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது ஊர் வரவே நான் பேருந்து படி அருகே சென்றேன், அங்கு நின்று கொண்டிருந்த அவரிடம்,

“அண்ணா என்ன ஞாபகம் இருக்கா?” என்றேன்.

அதற்கு அவர் “முகம் பார்த்த மாதிரி இருந்துச்சு ஆனா அடையாளம் தெரியலையே தம்பி” என்றார்.

“நான் ஸ்கூல் படிக்கும்போது தினமும் இந்த பஸ்ல தான் போவேன் என்று நாங்கள் அடித்த ஒரு கிண்டலை பத்தி சொன்ன உடன் புரிந்துக்கொண்டார்”

ஓ கரெக்ட் எப்படி பா இருக்கா ?, நீங்க ஆரம்பிச்சது தான் பா இன்னமும் காலைல உங்கமாதிரி பசங்க வந்து லூட்டி அடிக்கிறாங்க அத பார்க்கும் போது நீங்க தேவலாம் என்றார்.

சிரித்துக்கொண்டே நான் நல்லா இருக்கேன், எங்கு வசிக்கிறேன், எங்கு வேலை செய்கிறேன் என்பதை எல்லாம் சொல்லிவிட்டு, நீங்க இன்னும் இதே கம்பெனில தான் இருக்கிங்களா அண்ணா என்றேன்.

அதற்கு அவர் ஆமாம் பா என்றார்.

ஏன் நீங்க எதும் வேற கம்பனிக்கு try பண்ணலையா என்றேன். சாப்ட்வேர் கம்பெனி புத்தி என்ன பண்ண.

அதற்கு அவர் “இல்லை பா இங்க பழகி போச்சு, வயசாகிடுச்சு, இந்த கம்பனிலே ஒரு 20 – 25 வருஷம் ஆகிடுச்சு இனிமே வேற கம்பெனி போனா அங்கேயும் நம்மளுக்கு இங்க இருக்கிற மரியாதையை இருக்கும்னு எதிர் பார்க்க முடியாது, ரொம்ப மரியாத கொடுக்கவேண்டாம் atleast வாய் தவறி எதாவது சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாகிடும், அதான் இங்கே இருந்துட்டேன்” என்றார்.

அப்படியே அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன், எனது ஊர் வந்தது. அவரிடம் விடை பெற்று விட்டு, எனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அவர் சொன்ன அந்த காரணம், அந்த வார்த்தைகள் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன, எனது அலுவலகத்திலும் மாதா மாதம் ஒருவர் அல்லது இருவராவது 20 வருடங்கள் இங்கு வேலை பார்த்தவர்கள் என்று அவர்களை பத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்புவார்கள், அப்போ அவர்களுக்கும் இந்த அலுவலகத்தில் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம் இருக்குமோ என்று தோன்றியது. நானும் இந்த அலுவலகத்தில் திட்டதிட்ட 6 வருடங்கள் ஆயிற்று நமக்கும் இதே மாதிரி ஒரு காலம் வரும் அங்கு அப்பொழுது நாம் எப்படி இருப்போம் என்றே தோன்றியது.

Advertisements

Revolution 2020   2 comments

It is the latest book by Chetan Bhagat. I was so obsessed by this author right from the first book. Five point someone, I did not know why I got that book in landmark 4 years ago, I guess just because it mentioned about life in IIT. Then One night at the call center was mentioned to me by some friend in a train journey. The other book “2 States” happened to catch my eye in the Hazrat Nizammuddin Railway Station in New delhi where I had to board a train to chennai and thinking how to spend the next 20 hours alone. I saw this new book 3 days back while I was shopping for Diwali in my office, I could not resist went and bought this book. Although i did check his website occasionally for any new books that he is working on, whenever i visit his website, I could not find any updates. Lucky ??? As it had happened earlier I always happen to get his books by chance. I happen to start this book last night and ooh i completed in 5.5 hours. That was my fastest.

Love. Corruption.Ambition. As the tag line says, is the story revolves around Gopal Mishra, Rajeev Kashyap and Aarti. What else to expect when a story of 2 boys and a girl, you are right it is about same triangular love story that we have seen in many B/K/Tollywood movies. Interestingly though the prologue of the book already gave the reader the ending. It is the way how the author has unfolded the incidents made me to stick to the book. While I dont understand why the author has pinned this story in Varanasi as it happens in every other states, especially in TN.

While some part of the story seems to be boring and one could easily wear the hat of the author in telling what would be the next incident, it is the witty one liners at the end of each chapter and the authors own way of describing things especially Love and Girls, will keep you going.  Like the one’s below..

“Girls can handle simultaneous multi-topic conversations with ease.”

“How can god give girls so much power?. How can they turn productive, busy and ambitious men into a wilting mass of uselessness.”

“Girls can come up with simplest of messages that have the most complex meanings.”

“Love, officially, is nothing but a bitch.”

“Life is a bitch when the only woman you can think of belongs to someone else.”

The list goes on like a silly romantic comedy movie. Author has found the niche of making the reader smile with his words.

Finally, the author took the attire of khadis and Gandhi cap and started to support Anna Hazare in his own way.  One can surely say without any doubt that this book has all masala to become another movie. Lets wait and watch who is going to take up.

Posted October 18, 2011 by Srikanthan in Books

Tagged with , ,

அன்று இரவு   3 comments

அன்று இரவு அலுவலகத்தில் எனது வேலைகளை முடித்துவிட்டு (வேறென்ன நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நிரய ப்ரேக் எடுப்பது தான்…) வீட்டிற்கு போகலாம் என கிளம்பி கொண்டிருந்தேன் அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது நான் எனது இரு சக்கர வாகனத்தை எடுத்து வர வில்லை என்று. சரி பரவாயில்லை என எனது நண்பனை பஸ் ஸ்டாப் வரை வந்து இறக்கி விடுடா என்றேன், அவனும் சலித்துக்கொண்டே என்னை  இறக்கிவிட்டான். அவன் சலித்துகொண்டதற்கு காரணம், இரவு பணிக்கு வந்தவன் அன்று காலை முதல் தூங்கவில்லையாம்.

அது வரை என்ன நேரம் என்று பார்க்காத நான் அப்பொழுது தான் பார்த்தேன் மணி இரவு 11 ஆக பத்து நிமிடங்கள் இருந்தது. நான் சைதாப்பேட்டை செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். ஆனால் அங்கு வரும் பேருந்துகள் அனைத்தும் அடையார் வரையே சென்று கொண்டிருந்தது. பெருமூச்சுடன் எனது கைப்பேசியின் வானொலியில் பண்பலை அலைவரிசைகளை கேட்டு கொண்டே சாலையையும், அருகில் இருந்தவர்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனது அருகே ஒரு இரு சக்கர வாகனம் வந்து நின்றது. அதன் பின் இருக்கையில் அமர்திருந்தவர் என்னை நோக்கி நேராக வந்தார். பார்க்க நல்ல வாட்ட சாட்டமாக இருந்தார், சாதாரணமாக நான்கு பேரை தூக்கிபோடக்குடிய உடம்பு அவருக்கு அவர் எனது அருகில் வந்து,

“சார் சைதாப்பேட்டை செல்லும் பேருந்து இங்கு வருமா?” என்றார்.

அதற்கு நான் “நானும் அதற்கு தான் சார் wait பண்றேன் என்றேன்.”

அவர் திரும்பி தனது நண்பரிடம் விடை பெற்றுக்கொன்று எனது அருகே வந்து நின்றார்.

இருவரும் காத்திருந்தோம், 15, 20… 30 நிமிடங்கள் ஆகியும் எந்த பேருந்தும் வரவில்லை. எனது அலுவலக கேப் வரிசையாக சென்று கொண்டிருந்தது. “ஏண்டா அப்படி என்ன உனக்கு வைராக்கியம் கேப்பில் போகக்கூடாது என்று, இப்பொழுது அவஸ்தை படு நன்றாக கால் வலிக்க நில்” எனது மனத்துக்குள் இருந்து ஒரு குரல். இதை எண்ணியவாறு புன்முறுவலுடன் என்னிடம் பேசிய நபரை பார்த்தேன், அவர் என்னை அப்படியே கொன்று தின்று விடுவதை போல் முறைத்தார். சற்றே உறைந்து போன நான் பின்பு அதே புன்முறுவலுடன் அவரை பார்க்காதது போல திரும்பிக்கொண்டேன். மறுபடியும் அவரை பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

இறுதியில் திருவான்மியூர் செல்லும் பேருந்தே வந்தது அதில் ஏறி டைடெல் பார்க் வரை சென்று மாறி செல்லலாம் என்று ஏறினேன். அதில் அந்த நபரும் ஏறினார். பேருந்தில் அவர் இருக்கும் இடத்துக்கு நேர் எதிர்மறையாய் நின்றேன். ஒருவேளையாக டைடெல் பார்க்கில் இறங்கி அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். அங்கு என்னைத்தவிர வேறு யாருமே இல்லை. சிறிது நேரம் அங்கு உட்கார்ந்து புதிதாக வாங்கிய கேமராவில் படம் பிடிக்கிறேன் என்ற நினைப்பில் ஏதோ செய்து கொண்டு இருந்தேன் என்றே சொல்லவேண்டும். அங்கும் எந்த பேருந்தும் வரவில்லை.

தூரத்தில் ஒருவர் ரொம்ப நேரமாக எதிரே வரும் இரு சக்கர வாகனத்தை ஒட்டி வருபவர்களிடம் லிஃப்ட் கேட்டுக்கொண்டிருந்தார். பாவம் யாரும் அவருக்கு உதவவில்லை. அவரது விடா முயற்சிக்கு பலன் கிடைத்தது. நாம்தான் எப்பொழுதும் அடுத்தவரை பின்பற்றுவது வழக்கமாச்சே நானும் உதவி கேக்க ஆரம்பித்தேன். அப்பொழுது மனதில் ஒரு பயம் எவனாவது சரக்கு அடித்துவிட்டு போதயில் வந்து விட்டால்?. சமாளிப்போம் !! எவ்விளவோ பண்றோம் இத பண்ண மட்டோமா என சற்று தயக்கத்துடன் எனது கையை நீட்டினேன். எதிரே வந்த முதல் வண்டி நின்றது. ஆஹா!! நமக்கும் அதிஷ்டம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். (என்ன செய்வது இப்படி ஏதாவது நினைத்து தான் சந்தோஷப்படவேண்டும்).

அவர் – “கிண்டி”

நான் – “மத்திய கைலாசத்தில் இறங்கிக்குறேன்”

அவர் – “சரி”

வண்டியில் ஏறிய பிறகு இதே மாதிரி அங்கும் யாராவது வருவார் அவரிடம் உதவி கேட்டு அப்படியே போயிடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது மத்திய கைலாசம் வந்துவிட்டது.  “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று சொல்லிவிட்டு யாருமே இல்லாத பேருந்து நிறுத்தத்திற்கு சென்றேன்.

மணி நள்ளிரவு 12ஐ தாண்டி இருக்கும். அப்பொழுது மூன்று இரு சக்கர வாகனங்கள் எதிரே எந்த ஒரு வாகனமும் வராத போதும் சிவப்பு விளக்கிற்காக நின்று கொண்டிருந்தார்கள், “அட, இப்படியும் இருக்காங்கப்பா இவர்களுக்கு ஒரு சபாஷ்” சொல்லிவிட்டு நான் யாரிடம் லிஃப்ட் கேட்கலாம் என்று சாலையை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். யாரோ எனது பெயரை உறக்க கூப்பிட்டதாக ஒரு சப்தம். யாருடா இந்நெரத்தில் நம்மை அழைப்பது என்று திரும்பினபோது எதிரே என் நண்பன் சீனி என்கிற சீனிவாசன். சீனி எங்கள் ஊரில் இருந்து IIT மெட்ராஸில் PhD படித்துக்கொண்டிருக்கிறான். எனக்கு தெரிந்த வரயில் எங்கள் ஊரில் இருந்து தமிழ்வழி கல்வி கற்று இதுவரை வந்தது இவன் மட்டுமே, இதற்கு முன்னால் IIT குவஹதியில் முதுகலை பட்டம் வேறு. இதிலிருந்து அவனுடைய அறிவாற்றல் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

இங்க என்னடா பண்ற ? என சில கேள்விகளுடன் இருவரும் பேசிக்கொண்டே அருகில் இருக்கும் டீ கடை வரை சென்றோம். அவன் ஆரண்ய காண்டம் திரைப்படம் பார்த்துவிட்டு வருவதாக சொன்னான். அப்பொழுது அவன் சொன்னது பகிர் என்றது

“நல்ல வேல டா இன்னைக்கு அந்த பைத்தியம் இங்கு இல்ல, இது மாதிரி ஒரு நாள் நான் படம் பார்த்து விட்டு வந்த பொழுது அவன் என் மீது கல் எரிய என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான் நான் சைக்கிளில் வந்ததால் வேகமாக ஓடிவிட்டேன்.”

நான் சிர்த்துக்கொண்டே

” மச்சி இதுக்கு எல்லாம் புண்ணியம் பண்ணி இருக்கணும் டா என்றேன்”.

ஒரு வேளை அந்த பைத்தியம் அங்கு இருந்தால் நான் என்ன செய்து இருப்பேன் என்று என்னால் யோசிக்ககூட முடியவில்லை.

இவ்வாறு டீ குடித்துக்கொண்டு இருவரும் அரட்டை அடித்துக்கொண்டிருண்தோம். அவன் தன்னுடைய நண்பர்களை அறிமுகப்படுத்தினான், எங்களுக்காக அவர்கள் காத்திருக்க வைக்க விரும்பாத நான்.

” மச்சி நீ போடா நான் போய்க்கிறேன்” என்றேன்.

அதற்கு அவன் இருடா ஆட்டோ பிடிச்சுத்தறேன்” என்றான்.  நான் எவ்விளவு சொல்லியும் கேட்கவில்லை.

சரிதான் நண்பர்கள் காதலிகளை போல் நடு ரோட்டில் விட்டு செல்ல மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பிறகு ஒரு ஆட்டோ ஏறி சைதாப்பேட்டை வந்து இறங்கினேன். அங்கு இருந்து மறுபடியும் வானொலியில் பண்பலை கேட்டுக்கொண்டு எனது வீடு நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். சிறுது தூரம் சென்றவுடன், ஒருவர் என்னிடம் வந்து

” Hi, How are you?” என்றார்.

அந்த மந்தமான வெளிச்சத்தில் அவரது முகம் அவ்வளவாக தெரியவில்லை.  கண்களை குறுக்கிக்கொண்டு பார்த்தால் அவர் எனது அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவர். அவரை ஓர் இரு முறை பார்த்திருப்பேன், பேசியது கிடையாது ஆனால் பார்த்த பொது எல்லாம் சிரித்ததாக மட்டுமே ஞாபகம். அவரிடம் பேசிக்கொண்டே எனது வீடு வந்தடைந்தேன். அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வானத்தை நோக்கி பார்த்தேன் சந்திர கிரகணம் ஆரம்பித்து நிலா அழகாக மறைந்து கொண்டிருந்தது.  கடந்த 1-2 மணி நேரமாக நான் சந்தித்த மனிதர்களை நினைத்துக்கொண்டு பூட்டை திறந்து என் வீட்டுக்குள் நுழைந்த பொது மணி 1:10 .

அலுவலக காபில் சென்ற என் நண்பனுக்கு போன் செய்து எப்படா வீட்டுக்கு வந்த என்றேன், அவன் 30 நிமிடம் இருக்கும் டா, ஏன் கேக்குற? என்றான். ஒண்ணுமில்ல சும்மாதான் என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.   இத்தனை நிகழ்வுகளுக்கு அந்த 30 நிமிடங்களை விட்டு கொடுக்கலாம் என்று எண்ணியவாறு உறங்கப்போனேன். அப்பொழுது ” நீ செஞ்சது கரெக்ட் தான் மச்சி” எனது மனதில் இருந்து அதே குரல்.

கொஞ்ச தூரம் நடந்து வந்த களைப்பில் படுத்த உடனே கண் அசந்தது, அப்பொழுது எனது கைப்பேசி சிணுங்கியது. தூங்க கூட விடமாட்டங்கப்பா என்று நினைத்து அதை எடுத்துப்பார்த்தேன், தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ”

“ஹலோ மச்சி நான் தாண்டா சீனி பேசுறேன்”

“சொல்லு மச்சி, வீட்டுக்கு வந்துட்டேன்டா”

“ஓ !! வீட்டுல இருக்கியா. ஒரு சின்ன வேலையா ஊருக்கு வந்தேன், திடிர்னு உன் ஞாபகம் வந்தது சரி எப்படி இருக்கன்னு கேக்கலாம்னு call பண்ணினேன்.”

“அடுத்த சில நிமிடங்களுக்கு என்னால் எதுவுமே பேச முடியவில்லை, உடம்பெல்லாம் வெலவெலத்துப்போனது, குளிர்சாதன அறையில் படுத்திருந்தும் உடம்பிலிருந்து தாரை தாரையாக வேர்த்துக்கொட்டியது, எண்ண அலைகள் எங்கெங்கோ ஓடத்துவங்கின அதில் சில அவனை சந்தித்ததை திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தன, என்னற்ற கேள்விகள் என்னை சிதைத்துக்கொண்டிருந்தன.

“ஹலோ … ஹலோ….. ஹா…லோ……”

“டேய் … ஸ்ரீ … இருக்கியாடா … ஹலோ …. “

“ம்.. ம்.. ங்…. இருக்கேன் சொல்லுடா” வார்த்தைகள் தடுமாறின..எனது உதடுகளில் இருந்து வார்த்தைகளை தள்ளினேன்.

“எண்ண டா ஆச்சு ….?”

“ஒண்ணுமில்ல டா தூக்கம் வருது அதான், காலைல கூபிடட்டா ?”

“சரி தூங்கு, Good Night …”

“Good Night  … ” சொல்லி இணைப்பை துண்டித்தேன்.

அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. பிரம்மை பிடித்தவனைப்போல எனது உடல் அங்கு உட்கார்திருந்தாலும், நான் அங்கில்லை மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டு அங்கு நடந்த உரையாடல்களை மனத்திரையில் திரும்பத்திரும்ப ஒட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன். யாரா இருக்கும்…? ஒரு வேல அதுவா இருக்குமோ .. கால் இருந்துச்சே .. இருந்துச்சா ? இவ்வாறு சென்ற எண்ண ஓட்டங்களுக்கு நடுவில் எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை.

First Post   6 comments

I have this thought going on in my mind whenever I see something interesting and worth that it should be noted. The thought process went on such that whenever I was idle I would start day dreaming about the sentences/phrases that I can use. But writing and keeping it with you does not hold good if not it is shared to someone. So I decided that i would write a blog and jumped into this huge blogosphere. Although I created this id along time ago (almost a year) i have not had courage to post anything due to

First – to face this whole world of blogosphere with words/sentences/phrases that I have kept in my mind/heart which I feel it is correct and harsh comments that I may receive on my views. But then there is always two sides of a coin, I should learn to take always positive side and constructive criticism that I am going to receive is only going to help me improve my writing.

Second – which language to write (No No it is not that I know many languages) English or Tamil. I am neither good in Tamil nor in English. You know in English which I studied for more than 12years I got mere 150 in my twelfth standard exams and Tamil I last studied in my 10th grade. But I came up with an idea to write it colloquially the same way as we speak (Tanglish). So don’t expect my blog to be grammatically or literally perfect, although I will take steps to review many times before I post anything here.

And about the title, it depicts me the way I face the world, black or white, yes or no… and never be grey or stand in between.

So, here you go enjoy reading and do fill in your comments.

Posted June 22, 2011 by Srikanthan in Uncategorized