பயணம் !!!   8 comments

சமீபத்தில் எனது பிறந்த ஊருக்கு சென்றிருந்தேன், காலை 5:30 மணிக்கு திருச்சி பேருந்து நிலையத்தில் எனது சொந்த ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன், அப்பொழுது மின்னல் வேகத்தில் எனது அருகே வந்து நின்றது ஒரு பேருந்து. சரியான உறக்கம் இல்லாமல் கவலை தோய்ந்த கண்களுடன் அந்த பேருந்தை பார்த்தேன். அந்த பேருந்தின் பெயர் “காவேரி”. அது என் ஊருக்கு செல்லும் பேருந்து தான். சென்னை மற்றும் சில மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டத்திலும் தனியார் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

காவேரி என்ற பெயரை படித்த கணத்தில் இருந்து எனது மனதில் ஒரு புத்துணர்ச்சி கிளம்பியது, கவலை தோய்ந்த என் கண்கள் விரிந்தன பேருந்தை நோக்கி ஓடி, ஏறி அமர்ந்தேன். அதிகாலை என்பதால் பேருந்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது, சிலர் காய்கறி பழ மூட்டைகளை ஏற்றிகொண்டிருந்தனர். அன்றைய பொழுதிற்கான காய்கறிகளை சந்தையில் இருந்து தினமும் எங்கள் ஊருக்கு இந்த பேருந்தில் தான் எடுத்து வருவார்கள். ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து காலை பொழுதை ரசித்துக்கொண்டிருந்த பொழுது மனதுக்குள் ஏகப்பட்ட சுகமான நினைவுகள் என் தூக்க கலக்கத்தையும் மீறி என் சிந்தனையை கலைத்தன, அந்த எண்ண அலைகள் என்னை ஒரு 13 வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது.

நான் ஆறாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுருந்தேன், அது நாள் வரை பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான், முதல் முறையாக தனியார் பேருந்தில் அனுப்ப என் அப்பா முடிவு எடுத்திருந்தார்.

முதல் நாள் என்னை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச்சென்று, நிறைய அறிவுரைகளை கூறினார். ஆனால் எனக்கு எதுவுமே தலையில் ஏறவில்லை ஒரு பக்கம் தனியே செல்கிறோம் என்ற சந்தோஷம் இருந்தாலும் மறுபுறம் ஒரு வித பயமும், பீதியும் என்னை பற்றிக்கொண்டது. யாரோ என்னை ஆட்டிக்கொண்டது போல எனது மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஓடின, எனது முகம்  திருவிழாவில் கானாமல் போன ஒரு சிறுவன் நாம் தொலைந்துவிட்டோம் என்று அறிந்து அழுவதுர்க்கு முன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.  ஆனால் என் அப்பாவிற்கு எப்படி இருக்கும் என்று நான் நினைத்து பார்கவில்லை, இன்று விஞ்ஞான வளர்ச்சியில் நாம் சரியாக சென்றோமா என்ற விவரத்தை கைப்பேசி மூலம் அறிந்து கொள்ளலாம், அப்பொழுதோ அன்று மாலை நான் வீடு திரும்பினால் தான் அவர்களுக்கு நிம்மதி.

ஒரு வழியாக என்னை பேருந்தில் ஏற்றிவிட்டு அவர் சென்றுவிட்டார், அந்த பேருந்து காலை 8:45 எங்கள் ஊரில் இருந்து கிளம்புவதால் போக போக மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. எனது பின் இருக்கையில் இரு பெண்கள் தங்கள் குடும்ப கதையை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தனர், எனது அருகே இருந்தவர் நன்கு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார், பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்கள் பைகளை எனது மடியில் கொட்டினர், அப்பாவி பையனை போல் நான் எதுவுமே பேசவில்லை. ஜன்னல் வழியே ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த அறை மணி நேர பயணம் எனக்கு எதோ வெகு தூரம் செல்வதை போன்றே இருந்த்தது. ஒரு வழியாக 9:30 மணிக்கு நான் பள்ளி பொய் சேர்ந்தேன்.

இவ்வாறு சில நாட்கள் நான் என் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது எனது ஊரில் இருந்து எனது பள்ளிக்கு செல்லும் மற்றும்மொரு மாணவர் கூட்டம் தினமும் இந்த காவேரி பேருந்தில் தான் செல்லுவார்கள். அவர்கள் என்னை நிறைய முறை கூப்பிட்டும் நான் செல்லவில்லை காரணம் அவ்வளவு சீக்கிரம் பள்ளிக்கு சென்று என்ன செய்வது என்று மனதுக்குள் தோன்றும். ஒரு நாள் சரி போய்தான் பார்ப்போம் என்று ஏறினேன். அதற்கு பிறகு நான் என் பள்ளி படிப்பு முடியும் வரை அந்த பேருந்தில் தான் தினமும் சென்றேன். அந்த பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் முதல் அனைவரும் பயிற்சியம் ஆனார்கள், அதன் பின் ஒரு நாள் அந்த பேருந்தை விட்டால் மனதுக்குள் ஒரு உறுத்தலாகவே இருக்கும்.

அந்த 30 நிமிட பயணத்தில் நங்கள் அடிக்காத கிண்டல், கேலிகள் இருக்க முடியாது, கூட பயணம் செய்பவர்கள் முதல் ரோட்டில் செல்பவர்கள் வரை ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. அந்த சுகமான நினைவுகளை அசை போட்டு கொண்டிருக்கையில் ஒரு குரல் “சார் டிக்கெட்”. திரும்பி பார்த்தால் நான் பள்ளிக்கு சென்ற பொழுது டிக்கெட் கொடுத்த அதே நடத்துனர், நான் சிரித்துக்கொண்டே 10 ரூபாய் நோட்டை நீட்டினேன். உடனே “என்ன பா சில்லறை இல்லையா?, காலங்காத்தாலே சில்லறைக்கு நான் எங்க போறது” என்று புலம்பிக்கொண்டே டிக்கெட் கொடுத்தார். அவருக்கு என்னை சுத்தமாக ஞாபகம் இல்லை, அவரும் தான் எத்தனை ஆயிரம் பயணிகளை சந்தித்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது ஊர் வரவே நான் பேருந்து படி அருகே சென்றேன், அங்கு நின்று கொண்டிருந்த அவரிடம்,

“அண்ணா என்ன ஞாபகம் இருக்கா?” என்றேன்.

அதற்கு அவர் “முகம் பார்த்த மாதிரி இருந்துச்சு ஆனா அடையாளம் தெரியலையே தம்பி” என்றார்.

“நான் ஸ்கூல் படிக்கும்போது தினமும் இந்த பஸ்ல தான் போவேன் என்று நாங்கள் அடித்த ஒரு கிண்டலை பத்தி சொன்ன உடன் புரிந்துக்கொண்டார்”

ஓ கரெக்ட் எப்படி பா இருக்கா ?, நீங்க ஆரம்பிச்சது தான் பா இன்னமும் காலைல உங்கமாதிரி பசங்க வந்து லூட்டி அடிக்கிறாங்க அத பார்க்கும் போது நீங்க தேவலாம் என்றார்.

சிரித்துக்கொண்டே நான் நல்லா இருக்கேன், எங்கு வசிக்கிறேன், எங்கு வேலை செய்கிறேன் என்பதை எல்லாம் சொல்லிவிட்டு, நீங்க இன்னும் இதே கம்பெனில தான் இருக்கிங்களா அண்ணா என்றேன்.

அதற்கு அவர் ஆமாம் பா என்றார்.

ஏன் நீங்க எதும் வேற கம்பனிக்கு try பண்ணலையா என்றேன். சாப்ட்வேர் கம்பெனி புத்தி என்ன பண்ண.

அதற்கு அவர் “இல்லை பா இங்க பழகி போச்சு, வயசாகிடுச்சு, இந்த கம்பனிலே ஒரு 20 – 25 வருஷம் ஆகிடுச்சு இனிமே வேற கம்பெனி போனா அங்கேயும் நம்மளுக்கு இங்க இருக்கிற மரியாதையை இருக்கும்னு எதிர் பார்க்க முடியாது, ரொம்ப மரியாத கொடுக்கவேண்டாம் atleast வாய் தவறி எதாவது சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாகிடும், அதான் இங்கே இருந்துட்டேன்” என்றார்.

அப்படியே அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன், எனது ஊர் வந்தது. அவரிடம் விடை பெற்று விட்டு, எனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அவர் சொன்ன அந்த காரணம், அந்த வார்த்தைகள் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன, எனது அலுவலகத்திலும் மாதா மாதம் ஒருவர் அல்லது இருவராவது 20 வருடங்கள் இங்கு வேலை பார்த்தவர்கள் என்று அவர்களை பத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்புவார்கள், அப்போ அவர்களுக்கும் இந்த அலுவலகத்தில் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம் இருக்குமோ என்று தோன்றியது. நானும் இந்த அலுவலகத்தில் திட்டதிட்ட 6 வருடங்கள் ஆயிற்று நமக்கும் இதே மாதிரி ஒரு காலம் வரும் அங்கு அப்பொழுது நாம் எப்படி இருப்போம் என்றே தோன்றியது.

Advertisements

8 responses to “பயணம் !!!

Subscribe to comments with RSS.

 1. nice one… பயணங்கள், பெண்கள், குழந்தைகள் இவற்றைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், அலுப்பதே இல்லை……

  • ஆம். நன்றி சரவணா, ஒரு சந்தேகம் கனினி வழி தமிழ் எப்படி எழுதுகிறாய்?

 2. http://thamizha.com/project/ekalappai..
  http://software.nhm.in/products/writer

  இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்…

 3. ஸ்ரீகாந்தன்!! மிகவும் அருமை!! நிதர்சனமான உண்மையும்கூட!! நம் தந்தையர் காலத்தோடு முடிந்துவிடும்போலும் இந்த நன்றி எல்லாம்(அதான் ஒரே நிறுவனத்தில் வேலை செய்றத சொன்னேன்).
  தொடர்ந்து எழுதுங்கள்!!

 4. ஆங்!! சொல்ல மறந்துட்டேன், அங்க ஒரு சின்ன எழுத்து பிழை.
  கா’ண’மல்ன்னு வரணும். நீங்களே அந்த வரியா கண்டுபிடிங்க பாக்கலாம்.. 🙂

  • மிக்க நன்றி நண்பா .. !!!எனக்கு எங்கே என்று விளங்கவில்லை, சுட்டிக்காட்டவும் …

 5. ‘எனது முகம் திருவிழாவில் கானாமல் போன ஒரு சிறுவன் நாம் தொலைந்துவிட்டோம் என்று அறிந்து அழுவதுர்க்கு முன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ‘

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: